நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் அண்ணாமலை இன்குபேஷன் நிறுவனம் சார்பில் அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் உதவி பேராசிரியை சந்திர பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக்கழக புதுமை அடைகாக்கும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைமை நிர்வாகி கார்த்திகேயன், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்வை செம்மையாக்கும் வழிமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, துறை வாரியாக மாணவர் குழுக்களுடன் நிரல் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
கல்லுாரி கணினித்துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.