/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளிகளுக்கு புத்தகப்பை அனுப்பி வைப்பு
/
அரசு பள்ளிகளுக்கு புத்தகப்பை அனுப்பி வைப்பு
ADDED : ஜூன் 30, 2025 03:24 AM
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் அரசு பள்ளியிலிருந்து 3 தாலுகாக்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் இலவச புத்தகப்பை, ஷூ, சாக்ஸ் ஆகியவைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம் தாலுகாக்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, ஷூ, சாக்ஸ் வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
அதனையொட்டி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அனைத்தும் மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.