/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எள் செடிகள் செழிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
எள் செடிகள் செழிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 29, 2025 05:05 AM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில், எள் செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட நீண்டகால பயிர் சாகுபடிக்கு பதிலாக, குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடன் அதிக மகசூல் பெறும் பணப்பயிர்கள் சாகுபடி செய்திட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி மாவட்டத்தில் மக்காச்சோளம், உளுந்து, எள், வெங்காயம் போன்ற குறுகிய கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள எள் செடிகளில் பூக்கள் பூத்து, செழிப்பாக உள்ளன. ஏக்கருக்கு, 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்த செடிகளுக்கு பராமரிப்பு அதிகம் தேவையில்லை. குறைந்த அளவு செலவினத்தில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.