ADDED : ஜூன் 20, 2026 08:08 AM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமு, 47; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மாலை தனியாக இருந்த 14 வயது சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ராமு, சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து ராமுவை கைது செய்தனர்.
