/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
ADDED : அக் 23, 2024 05:46 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு, கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ராஜகோபால், 45. என்பவர், இடைநிலை ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.
இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இரண்டாம் வகுப்பு படித்த ஆறு வயது சிறுமிக்கு ஒரு மாத காலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவர், மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் திருநாவலுார் வட்டார கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. மேலும், பள்ளி மேலாண்மை குழு விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றி, கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பினர். அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஆசிரியர் ராஜகோபால் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதி - 17 (ஆ)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, ஒழுங்கு நடவடிக்கையில் தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலுக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டார்.