/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் ரோட்டரி கிளப் இலவச கண் பரிசோதனை
/
சங்கராபுரம் ரோட்டரி கிளப் இலவச கண் பரிசோதனை
ADDED : செப் 15, 2025 02:40 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, ஆர்.வி.என். குரூப்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ரோட்டரி கிளப் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணை ஆளுனர் சுரேஷ், தொழிலதிபர் சீனிவாசன், முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன் முகாமை துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் குழுவினர் 410 நபர்களின் கண்களை பரிசோதனை செய்தார். இதில், 190 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் கலாவதி ஜனார்த்தனன், குமதவள்ளி சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.