/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடையின் பூட்டை உடைத்து திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : மார் 17, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே டிராக்டர் ஒர்க்கர்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை உரிமையாளர் சதீஷ், 45; வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, டேபிளில் வைக்கப்பட்டிருந்த, 500 ரூபாய் திருடு போனது தெரிந்தது. உளுந்துார்பேட்டை போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், இரு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.