/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையை ஆக்கிரமித்து கடைகள் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையை ஆக்கிரமித்து கடைகள் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
சாலையை ஆக்கிரமித்து கடைகள் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
சாலையை ஆக்கிரமித்து கடைகள் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 26, 2025 04:51 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி உள்ளது.
நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. கார்கள், தள்ளு வண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
அதேபோல் நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தள்ளு வண்டி மற்றும் நடைபாதை கடை வியாபாரிகள் பலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே, வாகன போக்குவரத்து மிகுதியான சாலைகளில் சாலையோர நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.