/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம்
/
சின்னசேலத்தில் குறுமைய விளையாட்டு போட்டி துவக்கம்
ADDED : ஆக 07, 2025 02:41 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அரசு ஆண்கள் பள்ளியில் நடந்த குறுமைய தடகள விளையாட்டு போட்டிகளில் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு குறு மைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சின்னசேலம் குறு மையத்திற்கான தடகள விளையாட்டு போட்டிகள், சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.
முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் பாபு முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார். உதவி திட்ட இயக்குனர் மணி, உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், தலைமையாசிரியர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான தடகள போட்டிகளில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ராதாகிருஷ் ணன், பாலுசாமி, லோகநாதன், பாலு, மகாலட்சுமி, தினகரன், ராஜா, சாமிதுரை, நாகேந்திரன், சிங்காரவேல், முரளி, கிருஷ்ணா, ஆனந்தன் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர்.