தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு  

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு  

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு  


ADDED : ஆக 21, 2025 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ரிஷிவந்தியம் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகம் நடந்தது.

நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சாலை பெருவங்கூரில் உள்ள கோமதியம்மன் உடனுறை சங்கரலிங்கர் சித்தர் பீடத்தில் பிரதோஷத்தையொட்டி, திருமுறை பாடல்கள் பாடி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இதேபோல கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர், கள்ளக்குறிச்சி கஸ்துாரிபாய் தெரு மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாச்சலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமா மகேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அதேபோல், சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில், சங்கராபுரம் சன்னதி தெரு சங்கரலிங்கேஸ்வரர் கோவில், முதல்பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், தேவபாண்டலம் பாண்டுவனேசுவரர், தியாகராஜபுரம், மூக்கனுார், மஞ்சப்புத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us