/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமையலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
சமையலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூன் 02, 2025 12:19 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் சமையலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுாரில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி முன்னிலை வகித்தார்.
தனியார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பேராசிரியர்கள், வெஜ் பிரியாணி, சிக்கன் கிரேவி, காளான் பிரை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி, காளிபிளவர் பிரை, மசால் போண்டா, ராகிமால்ட் உட்பட பல்வேறு உணவு வகைகளை சுவையாக தயாரிப்பது தொடர்பாக சமையலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, வண்ணத்தமிழன், திருமுருகன், சுரேஷ், பாலகிருஷ்ணன், திட்ட அலுவலக பணியாளர்கள் சரவணன், சிவசுதா, அரசு சாரா தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.