/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரும்பு தோட்டத்தில் மண்டை ஓடு மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
/
கரும்பு தோட்டத்தில் மண்டை ஓடு மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
கரும்பு தோட்டத்தில் மண்டை ஓடு மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
கரும்பு தோட்டத்தில் மண்டை ஓடு மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
ADDED : நவ 26, 2025 07:28 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் கரும்பு தோட்டத்தில் கிடந்த மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் மற்றும் புடவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதிராஜ். இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று கரும்பு வெட்டினர்.
அப்போது தோட்டத்தின் நடுவே மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளுடன் புடவை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் மற்றும் புடவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.