கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை நான்கு வழி சாலை பணி மந்தம்:அதிகாரிக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை நான்கு வழி சாலை பணி மந்தம்:அதிகாரிக்கும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
UPDATED : ஆக 05, 2026 06:50 PM
ADDED : ஆக 05, 2026 06:24 PM

மூங்கில்துறைப்பட்டு: திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை பணி முழுமைப்படுத்தப்படாததால் அதிகரிக்கும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி மாவட்டங்களை இணைக்கும் விதமாக நான்கு வழி சாலை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 63 கிலோமீட்டர் துாரத்திற்கு இரு வழி சாலையாக இருந்ததை நான்கு வழி சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆங்காங்கே சில இடங்களில் நான்கு வழி சாலை அமைக்கப்படாமல் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனுார் இருந்து வரகூர் வரையிலான சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது.அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட கீரனுாரில் இருந்து வடபொன்பரப்பி சார் பதிவாளர் அலுவலகத்து வரையும், அதேபோல் வட பொன்பரப்பி மற்றும் கடுவனுார் வனகாடு பகுதிகளிலும், கொளத்துார் ஜங்ஷனிலிருந்து சங்கராபுரம் வரையிலும் ஆலத்துார் பகுதிகளிலும் நான்கு வழி சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கேட்டபோது, வனக்காடு பகுதியில் சாலை அமைக்க வனத்துறை அலுவலர்கள் சாலை அமைப்பதற்கான அனுமதி வழங்காததால் காலம் தாமதமாகி வருகிறது எனக் கூறினார். மூங்கில்துறைப்பட்டு இருந்து கள்ளக்குறிச்சி வரையிலான சுமார் 31 கிலோமீட்டர் 260 கோடி மதிப்பில் சாலை அமைப்பதற்காக அரசு தீர்மாணித்துள்ளது. இருந்து நான்கு வழிச் சாலை பணிகள் முழுமை பெறாததால் நான்கு வழி சாலையில் இருந்து இரு வழி சாலைக்கு வாகனம் மாறும்போது விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் தினமும் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் உயிரிழப்புகள் என எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதிகமான விபத்துக்கள் வட பொன்பரப்பி மற்றும் கடுவனுார் வனக்காடு பகுதிகளில், பணிகளை முடிக்காத சாலைகளில் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் முடிக்கப்பட்ட நான்கு வழி சாலையில் வரும் வாகனங்கள் , திடீரென இரு வழிசாலைக்கு மாறும் போது வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருவழிச்சாலையில் செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மூங்கில்துறைப்பட்டிலிருந்து கள்ளக்குறிச்சி வரையிலான 31 கிலோ மீட்டரில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு மட்டுமே சாலைகள் போடாமல் உள்ளன.இந்த நான்கு கிலோமீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் முடித்தால் தான் விபத்துகளை தடுக்கமுடியும் .
எனவே நான்கு வழிச்சாலை பணி முடிந்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
