UPDATED : செப் 22, 2026 05:56 PM
ADDED : செப் 22, 2026 05:53 PM
கள்ளக்குறிச்சி:செங்குறிச்சி துவக்கப்பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் 10 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு திட்டம் முகாம் நடந்தது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, விருத்தாசலம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை கோட்ட அஞ்சலக ஆய்வாளர் வடிவேலன் முன்னிலை வகித்தார்.
முகாமில் இந்திய அஞ்சல் துறையில் சிறு சேமிப்பு துவங்குவது, 5 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பது எப்படி. பணத்தை எப்படி அனுப்புவது என்பது குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கி கூறப்பட்டது.
முகாமில் குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு, அதற்குரிய சான்றுகளும் வழங்கப்பட்டது.
முகாமில் செங்குறிச்சி கிளை அஞ்சல் அலுவலர் தாண்டவராயன், துணை அஞ்சல் அலுவலர் கலைமொழி, குழந்தைகள், பெற்றோர்கள், அஞ்சலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
