ADDED : செப் 26, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வண்டல் மண் கடத்திய டிராக்டரை ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையான்பட்டு பகுதியில் ஏரியிலிருந்து மண் லோடுன் வந்த டிராக்டரை அவ்வழியாக வந்த ஆர்.டி.ஓ., முருகன் டிராக்டரை நிறுத்தினார். உடன், டிரைவர் டிராக்டரில் இருந்து இறங்கி தப்பியோடினார்.
மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷிடம் ஒப்படைத்தனர். அவர், மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
