sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சூரிய கிரகணம் கோவில்கள் நடை மூடல்

 சூரிய கிரகணம் கோவில்கள் நடை மூடல்

 சூரிய கிரகணம் கோவில்கள் நடை மூடல்


ADDED : பிப் 16, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களும் வரும் 17ம் தேதி மதியம் 3:00 மணியளவில் சூரியகிரகணத்தையொட்டி மூடப்படுகிறது.

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. அமாவாசை தினத்தன்று சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும். அப்போது சூரியனில் இருந்து வரும் ஒளியை சந்திரன் மறைக்கும்.

இதனால் பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ மறைந்தது போல தெரியும். அதன்படி, சூரிய கிரகணம் 17ம் தேதி மதியம் 3.26 மணிக்கு தொடங்கி, இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது.

இதையொட்டி ரிஷிவந்தியத்தில் உள்ள சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஆதிதிருவரங்கத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அரங்கநாத பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் 17ம் தேதி மதியம் 3:00 மணியளவில் மூடப்படுகிறது. தொடர்ந்து, 18ம் தேதி காலை கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைகள் செய்த பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us