/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வுக் கூட்டம்
/
திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வுக் கூட்டம்
ADDED : ஜன 12, 2025 10:45 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்-தினசரி குப்பைகளை சேகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 17 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் தினசரி கிராமப்புறங்களில் குப்பைகள் சேகரித்தல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
கிராமப்புறங்களில் தூய்மைக்காவலர்கள் பொது மக்களின் இல்லங்களுக்கு தினசரி சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தரம் பிரித்து வாங்க வேண்டும். தரம்பிரித்து குப்பைகள் வழங்குவதை உறுதி செய்து மக்கும் குப்பைகளை பொதுமக்களே அப்புறப்படுத்தும் வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.கிராமங்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும்.
எனவே கிராமங்களைத் துாய்மையாகப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். கிராமங்களைத் துாய்மையாகப் பராமரிப்பதில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
மேலும் துாய்மையும் ஒரு சேவை, எனவே பொதுமக்கள் துாய்மைக் காவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.