ADDED : செப் 24, 2026 07:22 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் பார்த்தீபன் மகன் பிரேம்ஆனந்த்,12; இவர், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை பிரேம்ஆனந்தை படிக்குமாறு கூறி தாய் சுமதி திட்டியுள்ளார். தொடர்ந்து, தாய் சுமதியும், தந்தை பார்த்தீபனும் விளைநிலத்திற்கு சென்றுள்ளனர். தாய் திட்டியதில் மனமுடைந்த பிரேம்ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்தாழ்ப்பாள் போட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு மூத்த மகன் ஹரிகிருஷ்ணன், தம்பி பிரேதம்ஆனந்த் துாக்கில் தொங்குவதை பார்த்து சத்தமிட்டார். உடன், அருகிலிருந்தவர்கள் பிரேம்ஆனந்தின் உடலை மீட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேம்ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
