/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாமனார் மீது டிராக்டர் ஏற்றிய மருமகன் கைது
/
மாமனார் மீது டிராக்டர் ஏற்றிய மருமகன் கைது
ADDED : ஏப் 16, 2025 11:58 PM
சின்னசேலம்; முன்விரோத தகராறில் மாமனார் மீது டிராக்டரை ஏற்றிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 68. இவரது மகள் விருத்தாம்பாள், 38. இவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், தலைவாசல் வட்டம், புத்துார் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் தங்கதுரை, 40, என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விருத்தம்பாள் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணி அளவில் முத்துகிருஷ்ணன் தனது வீட்டு வாசலில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அங்கு டிராக்டரில் வந்த தங்கதுரை முத்துக்கிருஷ்ணன் படுத்திருந்த கட்டிலின் மீது டிராக்டரை இடித்து அவரை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார். தட்டி கேட்ட விருதம்பாளையும் தாக்கினார். புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, தங்கதுரையை கைது செய்தனர்.