ADDED : ஏப் 21, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ஜெயந்த், 33; பி.இ., பட்டதாரி. இவர் மத்திய அரசு பணி தேர்வுக்கு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெயந்த் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அய்யாசாமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.