/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சோர்டியா ஜெயின் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
/
சோர்டியா ஜெயின் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
சோர்டியா ஜெயின் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
சோர்டியா ஜெயின் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 20, 2025 06:27 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த ஓலையனுார் சோர்டியா ஜெயின் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவிகள் ஆப்னா ஹசீரா 489 மதிப்பெண்ணும், அப்ஸனா பாத்திமா 485, நுஹா 465, மாணவர் அஸ்வின் 461, தேவா 439 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சேனக்ராஜ், சால்வை அணிவித்து பாராட்டினார்.
மெட்ரிக் பள்ளி முதல்வர் வினோலியா ராஜகுமாரி வரவேற்றார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரத்திபா, கோகுல், ஆஷா, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.