/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
/
காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 01, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை 6:00 மணிக்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வழக்கு பதிவேடு ஆவணங்களை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் அது தொடர்பான தகவலை கேட்டறிந்தார். கனமழை தருணத்தில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தினார். புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களுக்கு உடனடியாக அவர்கள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், ஜெயமணி, சிறப்பு பிரிவு ஏட்டு ஆறுமுகம் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

