ADDED : ஜன 02, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 9வது எஸ்.பி.,யாக அரவிந்த் நேற்று பொறுப்பேற்றார்.
கள்ளக்குறிச்சியில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த மாதவன் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, தென்காசியில் எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த அரவிந்த், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் மாவட்டத்தின் 9வது எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், திருப்பூர் மாநகர தலைமையிட துணை கமிஷனர், திருச்சி மாவட்ட துணை கமிஷனர், சென்னை மாநகர உளவுப்பிரிவு துணை கமிஷனர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., உட்பட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது சிறந்த பணிக்கான ஜனாதிபதி பதக்கம் பெற்றுள்ளார்.
