/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
/
அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : ஜன 18, 2024 04:49 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், மணல் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அதிகம் நடைபெறும்.
மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் என்பதால் போலீஸ் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பும் சற்று குறைவாகவே இருக்கும்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., யாக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தீபக் சுவாச் நேற்று முன்தினம் அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிறப்பாக பராமரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
எஸ்.பி., யின் திடீர் ஆய்வு போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. அப்பொழுது சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் உடன் இருந்தார்.