/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
/
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
ADDED : அக் 10, 2024 06:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெளிமாநில, புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள், 'கிக்' தொழிலாளர்கள் கட்டணமின்றி நலவாரியத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பழனி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி, அண்ணா நகரில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு செய்யும் சிறப்பு முகாம் அரசு வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது.
இதில், கட்டுமான தொழில் புரியும் வெளிமாநில, புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள், இணையம் சார்ந்த தொழில் புரியும் 'கிக்' தொழிலாளர்கள் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். எனவே, 18 - 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள தொழிலாளர்கள் இம்முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். முகாமிற்கு வரும்போது தொழிலாளி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் ஆகிய அசல் ஆவணங்களுடன், எண்.23 /ஏ, தாய் இல்லம், அண்ணா நகர் மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி 606202 - என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து புதிய உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.