sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம்கள்! விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அறிவுறுத்தல்

/

மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம்கள்! விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அறிவுறுத்தல்

மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம்கள்! விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அறிவுறுத்தல்

மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறப்பு முகாம்கள்! விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அறிவுறுத்தல்


ADDED : ஜன 20, 2024 05:51 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியம் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்திட அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டதாகும். கோமுகி, மணிமுக்தா அணைகளின் மூலம் நீராதாரம் பெற்று ஆண்டுக்கு இரண்டு போகம் விளைச்சல் பெறும் நிலை இருந்து வருகிறது. மாவட்டத்தில் 89 ஆயிரத்து 416 எக்டேர் நீர்பாசன வசதி பெறுகிறது.

கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி, மஞ்சள், வெங்காயம், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை உற்பத்தி 3.14 லட்சம் மெட்ரிக் டன், உணவு தானிய உற்பத்தி 6.25 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 2023ம் ஆண்டு மழையளவு 30 சதவீதம் குறைந்துள்ளது. எனவே எதிர்வரும் வறட்சி காலத்தை சமாளித்து விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க நீர் பாசன வசதி உள்ள அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறப்பு முகாம்கள் கிராமம் தோறும் 19ம் தேதி (நேற்று) துவங்கி வரும் 31ம் தேதி வரை அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது.

மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக 27 ஆயிரத்த 100 எக்டேர் மட்டுமே சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 62 ஆயிரத்து 316 எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட இந்த சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடக்கும் முகாமில் அடங்கல் பெறுதல், சிறு விவசாயி சான்று பெற பதிவு செய்தல். சொட்டு நீர் பாசனம் பதிவு செய்தல் ஆகிய பணிகள் செய்து தரப்படும்.

இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் சொட்டு நீர் நிறுவனங்கள் பங்கேற்று நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

மேலும், சொட்டு நீர் பாசனம் அமைக்க ஒரு எக்டேருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாயும், 0.80 எக்டேருக்கு ஒரு லட்சத்து 6,654 ரூபாயும், 0.40 எக்டேருக்கு 48 ஆயிரத்து 233 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.

அதேபோல், தெளிப்பு நீர் பாசனத்திற்கு ஒரு எக்டேருக்கு 38 ஆயிரத்து 849 ரூபாயும், 0.80 எக்டேருக்கு 32 ஆயிரத்து 981 ரூபாயும், 0.40 எக்டேருக்கு 21 ஆயிரத்து 245 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.

இதற்கான ஆவணங்களாக விவசாயி புகைப்படம், ரேஷன் கார்டு, சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா 80723 30491, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில் 99947 36972, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தனசேகர் 97871 91612, முத்துசாமி 97862 32345, சரண்யா 85082 12379 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு அறியலாம்.






      Dinamalar
      Follow us