/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
/
கள்ளக்குறிச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : அக் 16, 2024 05:19 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மழை பெய்ய துவங்கிவிட்ட நிலையில், நடமாடும் மருத்துவ குழுவின் சார்பாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மழை பொழிவு துவங்கிவிட்ட நிலையில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உத்தரவின் பேரில் காய்ச்சல் மற்றும் பருவகால நோய்களுக்கான சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சியில் கருணாபுரம், க.மாமனந்தல் ரோடு ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.மருத்துவ அலுவலர் காந்திமதி தலைமையில், சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிமுறைகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காய்ச்சல் வராமல் தடுக்க, குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும். காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், வசந்தன், பாலா, செவிலியர் தேன்மொழி, நகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு சிகிச்சை பெற்று சென்றனர்.