/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கும்பாபிேஷகம் செய்ய சிறப்பு பூஜை
/
கும்பாபிேஷகம் செய்ய சிறப்பு பூஜை
ADDED : ஜன 04, 2024 06:14 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சுப்பிரமணி சுவாமி கோவில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் செய்வதற்கு கணபதி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
உளுந்துார்பேட்டையில் பழமை வாய்ந்த சுப்பிரமணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 26 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதனையொட்டி சுப்பிரமணி சுவாமி கோவில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் நேற்று கணபதி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
நிகழ்ச்சி எற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, உளுந்துார்பேட்டை நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், சாந்தி இளங்கோவன், ராஜேஸ்வரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.