/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வாரா கடன்களுக்கான சிறப்பு தீர்வு திட்டம்
/
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வாரா கடன்களுக்கான சிறப்பு தீர்வு திட்டம்
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வாரா கடன்களுக்கான சிறப்பு தீர்வு திட்டம்
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வாரா கடன்களுக்கான சிறப்பு தீர்வு திட்டம்
ADDED : ஜூலை 09, 2025 12:52 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள், ஊரக வளர்ச்சி வங்கி, பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலமாக வழங்கப்பட்ட சிறு வணிக கடன், தொழில் கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட பண்ணை சாரா கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாக வேளாண் விளை பொருட்களை கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இனங்களில் கடந்த 2022ம் ஆண்டு டிச., 31ம் தேதிக்குள், முழுயைமாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடனை தீர்வு செய்வதற்காக கடந்த 2024ம் ஆண்டு செப்., 12ம் தேதிக்கு முன், 25 சதவீத தொகையை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்களும், ஒப்பந்தம் மேற்கொண்டு மீதமுள்ள 75 சதவீத தொகை செலுத்தாதவர்களும், தற்போது 9 சதவீத சாதாரண வட்டி ஒரே தவணையில் செலுத்தி கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.
கடன்கள் மட்டுமின்றி கடந்த 2022, டிச. 31ல் முழுமையாக தவணை தவறி, 3 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய கால வேளாண் கடன்கள், பயிர் கடனாக வழங்கப்பட்டு மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், சிறு தொழில் கடன்கள், மகளிர் தொழில் முனைவோர் கடன்களுக்கும் தீர்வு காணலாம்.
9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவை தொகையை, வரும் 2025, செப்., 23ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.