/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
/
திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 05, 2024 12:02 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானத்திற்கு கைங்கர்யம் செலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு ஆரத்தி பூஜை, சுவாமி பல்லக்கு சேவையில் அருள்பாலித்தார்.