/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
/
வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
ADDED : மார் 19, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாத, சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, விஸ்வக்சேனர் பூஜை, கலச ஆவாஹனம் நடத்தி வரதராஜ பெரு மாளுக்கு விசேஷ திரவியம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திர பாராயணத்திற்குப்பின், மகா தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
பூஜைகளை அர்ச்சகர் சிவசுப்ரமணி செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.