/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறன் மாணவர்கள் விளையாட்டு போட்டி
/
மாற்றுத்திறன் மாணவர்கள் விளையாட்டு போட்டி
ADDED : மார் 07, 2024 11:57 AM
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜசேகர், முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினர். மேற்பார்வையாளர் ப்ரீத்தா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரன், சிறப்பு பயிற்றுநர்கள் நஸ்ரின், ஜான்சி, கற்பகம், சத்யா, இயன்முறை மருத்துவர் விஜயமோகன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்தனர். பலுான் ஊதுவது, மியூசிக் சேர், ஓட்டப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறன் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாற்றுத் திறன் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

