/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : ஆக 16, 2025 11:44 PM

கள்ளக்குறிச்சி; கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள் தலைமை தாங்கினார். தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், நிர்வாக இயக்குநர் சக்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரமோகன், செயலாளர் பொன்குமார் ஆகியோர் தீப ஜோதி ஏற்றி போட்டிகளை துவங்கி வைத்தனர். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இ.சி.ஆர்., இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. கபடி, கோ கோ, ஓட்டப்பந்தயம், வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.