
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லூரியின், 25 வது ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
காலையில் நடந்த விளையாட்டு விழாவில், நான்கு முனை சந்திப்பிலிருந்து மாணவர்களின் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் துவங்கியது. நிறைவாக கல்லூரி மைதானத்தில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
கல்லூரி துணைத் தலைவர் முஸ்டாக் அகமது உறுதிமொழி வாசித்தார். கல்லூரி தலைவர் செல்வராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனி ராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் நாராயணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார், உடற் கல்வி இயக்குனர்கள் சிவப்பிரகாஷ், நிதிஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.