/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செயின்ட் ஜோசப் பள்ளி ஆண்டு விழா
/
செயின்ட் ஜோசப் பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 10, 2025 12:07 AM

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த வாழவச்சனூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சாராள் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா, சப் இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோசப் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள் திருக்கோவிலுார் சக்தி கல்வி நிறுவன நிர்வாகி ராஜேஷ்குமார், தாசில்தார் வெங்கடேசன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியர் ரஞ்சிதா தொகுத்து வழங்கினார்.
பொறுப்பாசிரியர் பாரதி நன்றி கூறினார்.