/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; கலெக்டர் துவக்கி வைப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; கலெக்டர் துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; கலெக்டர் துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2025 09:00 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று பேசுகையில், 'வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை உட்பட பல்வேறு துறைகளின் மூலமாக நடைபெறும் இம்முகாமில் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து 45 நாட்களுக்குள் தீர்வுகாண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 72 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 16 ஆயிரத்து 292 கோரிக்கை மனுக்கள், இதர துறை சார்ந்து 16 ஆயிரத்து 552 மனுக்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 844 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இம்மனுக்களின் மீது விரைவாக தீர்வு காணப்படும். அத்துடன் மாவட்டம் முழுதும் இன்னும் 90 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளது.
எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். முகாமில் கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.