/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
/
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:52 AM

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., திருமண மண்டபத்தில் கலெக்டர் பிரசாந்த் திட்ட முகாமினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மலையரசன் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் முன்னிலை வகித்தனர். முகாமில், மகளிர் உரிமை தொகை உட்பட பல்வேறு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் அளித்தனர்.
மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதியில் மொத்தம் 162 முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் நலத்திட்ட உதவி கோரி விண்ணப்பத்துடன் வந்த பொதுமக்களிடம் கலெக்டர் பிரசாந்த் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, சப்கலெக்டர் ஆனந்தகுமார் சிங், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர சேர்மன் சுப்ராயலு, ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், ஆர்.டி.ஓ., லுார்துசாமி,  சமூக பாதுகாப்பு திட்டம் சப்கலெக்டர் சுமதி, நகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

