/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 20, 2025 07:18 AM

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அடுத்த திம்மலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா திட்ட குழு தலைவர் அண்ணாதுரை, தாசில்தார் பசுபதி, பி.டி.ஓ., கொளஞ்சிவேலு முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தேவி ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் புவனேஸ்வரி பெருமாள் உங்களுடன் ஸ்டாலின் முகாமின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உட்பட 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. திம்மலை, மேல்விழி, வாழவந்தான்குப்பம், சின்னமாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். முகாமில், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜேஷ், ஊராட்சி தலைவர்கள் செல்வராணி, அப்போலியன், ராமலிங்கம், ஜோதி, ஊராட்சி துணைத்தலைவர் ஆழ்வார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பி.டி.ஓ., மோகன்குமார் நன்றி கூறினார்.