/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தன்னார்வலர் பணி துவக்கி வைப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தன்னார்வலர் பணி துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தன்னார்வலர் பணி துவக்கி வைப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தன்னார்வலர் பணி துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:14 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், தன்னார்வலர்களின் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேரில், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக திட்ட விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கலெக்டர் பிரசாந்த் பணியை துவக்கி வைத்து, விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறைகள், தகவல் கையேட்டிலுள்ள தகவல்களை பொதுமக்களிடம் எடுத்து கூறினார்.
கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது; நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
பொதுமக்களுக்கு விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணியில் 1,288 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி மூன்று மாதம் தொடர்ந்து நடக்கும். மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரகப் பகுதியில் 162 முகாம் நடக்கிறது.
தங்களது குறைகள், கோரிக்கையை மனுக்களாக அளித்து பொதுமக்கள் தீர்வு காணலாம் என கூறினார்.
வீட்டிற்கே நேரடியாக வந்து முகாம் தொடர்பான தகவலும், முகாமில் வழங்கப்படும் திட்ட பயன்கள் குறித்து கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ஏமப்பேர் மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, நகராட்சி சேர்மன் சுப்ராயலு, துணை தலைவர் ஷமீம் பானு, நகராட்சி கமிஷனர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சுமதி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.