/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சின்னசேலத்தில் துவக்கம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சின்னசேலத்தில் துவக்கம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சின்னசேலத்தில் துவக்கம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சின்னசேலத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 09, 2025 12:50 AM

சின்னசேலம்: சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ., நேற்று தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.
சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று, விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம், சாதி சான்று, பட்டா மாறுதல், ஊனமுற்றோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உட்பட அரசு திட்டங்கள் பயன்படுத்துகிறார்களா, வேறு ஏதேனும் திட்ட பயன் பெற வேண்டுமா என கேட்டு விண்ணப்பங்கள் வழங்கினர்.
பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், துணை சேர்மன் அன்பு மணிமாறன், செயல் அலுவலர் கணேசன் உட்பட அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.