/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
சின்னசேலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சின்னசேலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சின்னசேலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 24, 2025 10:00 PM

சின்னசேலம்; சின்னசேலம் பேரூராட்சியில் 2ம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் முதல் 9 வார்டுகளுக்கு கடந்த வாரம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து முடிந்தது. மீதமுள்ள 9 வார்டுகளுக்கு நேற்று 2ம் கட்டமாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் ஜோதிபாசு, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன் வரவேற்றார்.
முகாமில், புதிய சொத்து வரி விதிப்பு ஆணை மற்றும் பெயர் மாற்றம் குறித்து மனு வழங்கிய 15 பேருக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் சாரங்கன், காந்தி, அரசு உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தாசில்தார் பாலகுரு நன்றி கூறினார்.