sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 2 மாதத்தில் 58,257 மனுக்கள்

/

கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 2 மாதத்தில் 58,257 மனுக்கள்

கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 2 மாதத்தில் 58,257 மனுக்கள்

கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்; 2 மாதத்தில் 58,257 மனுக்கள்


ADDED : செப் 15, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 58,257 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கிடும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமினை கடந்த ஜூலை 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகர்ப்புற பகுதிகளில் நடைபெறும் முகாமில், 13 துறைகளுக்குட்பட்ட 43 சேவைகளும், ஊரக பகுதியில் நடைபெறும் முகாமில், 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் அளிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் 39, ஊரகப்பகுதிகளில் 123 என மொத்தமாக 162 இடங்களில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. முகாம் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 1,288 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முகாமில், வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் உபகரணம் கோருதல் உட்பட பல்வேறு தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 36 இடங்களில் நடந்த முகாமில் 16,985 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மகளிர் உரிமைத்தொகைக்காக மட்டும் 12,963 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த ஆக., மாதம் 60 இடங்களில் நடந்த முகாம்களில் 41,272 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 18,130 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்கள் 96 இடங்களில் நடந்த முகாமில் மொத்தமாக 58,257 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 31,343 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். மனுக்கள் அனைத்தும் துறை வாரியாக பிரித்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us