/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
திருக்கோவிலுாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 04, 2025 01:19 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கும், 11 கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வார்டு எண் 17, 18க்கு மார்க்கெட் தெரு, ஜெயின் மகாலில் நேற்று முகாம் நடந்தது. நகராட்சி ஆணையர் திவ்யா தலைமை தாங்கினார். தாசில்தார் ராமகிருஷ்ணன், பொறியாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு நகராட்சி சேர்மன் முருகன் வழங்கினார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றம் என 13 அரசுத்துறையைச் சேர்ந்த, 43 சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகராட்சி ஊழியர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.