ADDED : செப் 08, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த நைணார்பாளையம், வி.மாமாந்துார், கருந்தலாக்குறிச்சி உள்ளிட்ட 3 ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
நைணார்பாளையளயம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
வேளாண் உதவி இயக்குனர் ஜோதிபாசு, ஆத்மா குழு தலைவர் கனகராஜ், ஊராட்சி தலைவர் மலர்கொடி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சுமதி வரவேற்றார். தாசில்தார் பாலகுரு, துணை பி.டி.ஓ., புவனேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் மாயாண்டி, அழகுவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சித்ரா, பெரியசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்த கொண்டனர். 3 ஊராட்சி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.