/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் அரியலுாரில் நாளை நடக்கிறது
/
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் அரியலுாரில் நாளை நடக்கிறது
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் அரியலுாரில் நாளை நடக்கிறது
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் அரியலுாரில் நாளை நடக்கிறது
ADDED : செப் 05, 2025 07:42 AM
கள்ளக்குறிச்சி; அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (6ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு
ரிஷிவந்தியம் வட்டாரத்தில் அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (6ம் தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.
முகாமில் பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு , குழந்தைகள், நுரையீரல், அறுவை சிகிச்சை, கண், பல், காது மூக்கு தொண்டை, மனநல மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை சிகிச்சை, கதிர் இயக்க சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மேலும் முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.