/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருகோவிலுார் அருகே நட்சத்திர ஆமை
/
திருகோவிலுார் அருகே நட்சத்திர ஆமை
ADDED : ஜன 08, 2025 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே அரிய வகை நட்சத்திர ஆமையை கிராம மக்கள் பார்த்து வியந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராம ஏரிக்கரை பகுதியில், அரிய வகையை சேர்ந்த நட்சத்திர ஆமை ஒன்று தென்பட்டது. இதனைப் பார்த்த சிறுவர்கள் வித்தியாசமாக இருந்ததால் செல்போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
சமீபத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில் இந்த ஆமை அடித்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அரிய உயிரினத்தை பாதுகாக்கும் நோக்கில் அதன் போக்கில் விட்டதால் புதர் பகுதிக்கு சென்று மறைந்து விட்டது.