/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
/
மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
மாநில விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து
ADDED : ஆக 04, 2025 01:29 AM

கள்ளக்குறிச்சி : தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தேசிய அளவிலான கபடி, சிலம்பம், டேக்வண்டோ போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவ மாணவிகள் 9 பேர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனையடுத்து பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.