தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/புள்ளியியல் கையேடு வெளியீடு

புள்ளியியல் கையேடு வெளியீடு

புள்ளியியல் கையேடு வெளியீடு


ADDED : பிப் 23, 2024 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 10:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட 2022-23ம் ஆண்டிற்கான புள்ளியியல் கையேடு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் மாவட்டத்தின் புள்ளியியல் கையெடு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டிற்கான கள்ளக்குறிச்சி மாவட்ட புள்ளியியல் கையேட்டினை கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆராய்ச்சி படிப்பதற்கு தேவையான புள்ளி விபரங்கள், மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்கள், அணைகள், நீர் நிலைகள் மற்றும் மாவட்டத்தின் சராசரியான மழையளவு, மக்கள் தொகை, விவசாய சாகுபடிகள் குறித்த புள்ளி விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்புள்ளி விபரங்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகள் வழியாக சேகரிக்கப்பட்டு தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், புள்ளியியல் துணை இயக்குனர் முத்துக்குமரன், கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us