தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புதிய ரேஷன் கார்டுகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்க நடவடிக்கை: கலெக்டர் அறிவிப்பு

புதிய ரேஷன் கார்டுகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்க நடவடிக்கை: கலெக்டர் அறிவிப்பு

புதிய ரேஷன் கார்டுகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்க நடவடிக்கை: கலெக்டர் அறிவிப்பு


UPDATED : ஜூன் 02, 2026 07:59 PM

ADDED : ஜூன் 02, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2026 07:59 PM ADDED : ஜூன் 02, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய ரேஷன் கார்டுகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது விநியோக திட்ட மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம், குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கைகள், திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி கொண்டு செல்ல வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது விநியோக திட்ட பொருட்கள் பிற இடங்களில் விற்பனை செய்யாமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பத்மஜா அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்க அலுவலர் முத்தையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us