/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்கு சந்தை முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கு
/
பங்கு சந்தை முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஆக 02, 2025 11:08 PM

கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் பங்கு சந்தை முதலீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். டீன் அசோக் வாழ்த்திப் பேசினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கோமதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்துாரைச் சேர்ந்த பங்கு சந்தை பயிற்சியாளர் பிரபாகரன், பங்கு சந்தை என்றால் என்ன, விலை மாற்றங்கள், குறியீடுகள், தேசிய பங்கு சந்தை நிலவரம், மும்பை பங்கு சந்தை மாற்றம், முதலீடு செய்வது எப்படி, கவனமாக கையாளுதல் உட்பட பல்வேறு தகவல்கள் குறித்து பேசினார்.
கருத்தரங்கில், உதவி பேராசிரியர்கள் செல்வராணி, சுபாஷினி, ராஜேஸ்வரி, அனந்தராமன், தீபா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். வணிக மேலாண்மை துறைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.